தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு! - உருவ பொம்மை

திருநெல்வேலி: சசிகலாவை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

உருவ பொம்மை எரிப்பு
உருவ பொம்மை எரிப்பு

By

Published : Jun 23, 2021, 5:07 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சசிகலாவை சுமந்து செல்ல நாங்கள் தயாராக இல்லை என்று அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உருவ பொம்மை எரிப்பு

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று (ஜுன்.23) போராட்டம் நடத்தினர். வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்கள் நத்தம் விஸ்வநாதன் ஒழிக என்று கண்டன கோஷம் எழுப்பினர்.

இதையும் படிங்க: காவல் துறை வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி

ABOUT THE AUTHOR

...view details