தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மக்கள் முற்றுகைப் போராட்டம் - அம்பாசமுத்திரம் ரயில் நிலையம்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் புதிய மதுபான கடையைத் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

sdsdsd
sdsd

By

Published : Mar 20, 2020, 11:00 PM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மகளிர் பள்ளி, ரயில் நிலையம், பெண்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் உள்ளன. இதன் அருகில், அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் அரசு புதிதாக மதுபான கடையை அமைத்துள்ளது.

இதற்குப் பொதுமக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தக் கடையினால் பொதுமக்களுக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்பாற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது என குற்றஞ்சாட்டியிருந்தனர்.

புதிய டாஸ்மாக் கடை திறந்ததால் எதிர்ப்பு

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் திடீரென்று மதுபான கடையைத் திறந்து விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர். அப்போது, கடையை இந்த இடத்தில் செயல்படுத்த விட மாட்டோம் என்றும், கடையினை வேறு பகுதிக்கு உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:கேரளாவை ஆட்டிப்படைக்கும் கரோனா: மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி!

ABOUT THE AUTHOR

...view details