தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் அதிமுகவினர் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பால் ஆம்புலன்சில் சிக்கித்தவித்த நோயாளிகள் - ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது

நெல்லையில் அதிமுகவினரின் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி திணறியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

நெல்லையில் அதிமுகவினர் போராட்டம்
நெல்லையில் அதிமுகவினர் போராட்டம்

By

Published : Oct 19, 2022, 6:17 PM IST

நெல்லை: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையினை ஒதுக்கக்கோரி நேற்று அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருக்கை ஒதுக்கக்கோரியும் அதிமுகவினருக்கு சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தடையை மீறி இன்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

இதனைக்கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகை விற்பனை நடந்து வரும் நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் திடீரென அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தப் போக்குவரத்து நெரிசலால் அந்த வழியாக வந்த மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. வாகன ஓட்டிகள் வழிவிட முயன்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு வந்ததால், ஆம்புலன்ஸ்கள் எளிதில் நெரிசலைக் கடந்து செல்ல முடியாமல் திணறியது.

நெல்லையில் அதிமுகவினர் போராட்டம்

பின்னர் ஒருவழியாக ஒரே ஒரு ஆம்னி பேருந்து மட்டும் கடும் போராட்டத்துக்குப் பிறகு நெரிசலை கடந்து சென்றது. தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர். தங்கள் சொந்தக் கட்சி பிரச்னைக்காக நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் செய்த இந்த சாலை மறியல் போராட்டம் பொது மக்களிடையே முகம் சுளிக்க செய்தது.

இதையும் படிங்க: சிசிடிவி:இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி அதிர்ஷ்டவசமாக குழந்தை உள்பட 3 பேர் உயிர் தப்பினர்!

ABOUT THE AUTHOR

...view details