தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் வழக்கறிஞரை செல்போனில் படம் பிடித்த ஓட்டல் ஊழியர்: கொந்தளித்த சக வழக்கறிஞர்கள்! - திருநெல்வேலி நீதிமன்றம்

திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள உணவு விடுதியில் சாப்பிட வந்த பெண் வழக்கறிஞர்களை கடையின் பணியாளர் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரத்தில் காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 13, 2023, 6:50 PM IST

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் தூத்துக்குடி செல்லும் பிரதான சாலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரே உணவு விடுதி அமைந்துள்ளது. இந்த உணவு விடுதியில் ஒரு இளம் பெண் வழக்கறிஞர் தனது சக பெண் வழக்கறிஞர்களுடன் உணவு அருந்துவதற்காக சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த கடையில் பணியாற்றி வரும் ஊழியர் முருகன் என்பவர், அந்த இளம்பெண் வழக்கறிஞர் மற்றும் அவரோடு உணவருந்தசென்ற பெண் வழக்கறிஞர்களை அனுமதியின்றி செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட இளம்பெண் வழக்கறிஞர் மற்றும் சக வழக்கறிஞர்கள் செல்போனில் வீடியோ எடுப்பதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தடுத்து நிறுத்தியதால் முருகன் ஆத்திரமடைந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் எழுந்த நிலையில் கடையின் உரிமையாளர் தான், தன்னை வீடியோ எடுக்கச்சொன்னதாகவும் கடையின் ஊழியர் முருகன் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த தகவல் அறிந்த வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட உணவு விடுதியின் முன்பு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், தகவல் அறிந்து உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், உணவு அருந்த சென்ற பெண் வழக்கறிஞர்கள் காவல் துறையினரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனுவை அளித்தனர். ஆனால், அதைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கடையின் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது. இறுதியில் பெண் வழக்கறிஞர்களை அனுமதி இன்றி செல்போனில் வீடியோவாக எடுத்த முருகனை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த நிகழ்வுகளால் பரபரப்பான அந்த இடம் மேலும் பரபரப்பாக மாறியது.

இதையும் படிங்க:பார் உள்ளே புகுந்து ஊழியர் மீது சரமாரி தாக்குதல்; பணத்துடன் தப்பிய நான்கு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details