தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை காண திரண்ட அதிமு தொண்டர்கள் - கரோனா பரவும் அபாயம்! - cm palanisamy visit kanniyakumar

திருநெல்வேலி: கன்னியாகுமரி செல்லும் வழியில் முதலமைச்சரை காண அதிமுக தொண்டர்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணியாமல் திரண்டதால் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது.

admk party
admk party

By

Published : Nov 10, 2020, 2:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கரோனோ ஆய்வு கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று (நவ.10) தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நெல்லை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார்.

முன்னதாக நெல்லை கேடிசி நகர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் முதலமைச்சருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.

அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் தகுந்த இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதலமைச்சர் அதிமுக தொண்டர்களுக்கு வலியுறுத்த தவறிவிட்டாரா என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. முகக்கவசம் அணியாமலும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டமாக குவிந்த தொண்டர்கள்

குறிப்பாக பெண்கள் முதியவர்கள் கையில் கைக்குழந்தையுடன் சாலைகளில் முதலமைச்சருக்காக காத்துக் கிடந்ததால், கேடிசி நகர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:திருத்தணிகாச்சலம் குண்டர் சட்டம் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details