தமிழ்நாட்டில் கரோனா தொற்று தாக்கத்தால் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதற்கட்டமாக பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஜூன் 14) முதல் நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இன்று பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 54 அரசு, 66 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்கின்றனர்.
கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதாவது ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளை ஒதுக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட பாடப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், அந்தப் பாடப்பிரிவில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், சாதிச் சான்று ஆகிய ஆவணங்களை கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிளஸ்-1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்! இதனை கொண்டு வர தவறிய மாணவர்களை, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். கரோனா காலம் என்பதால் யாரும் நேரில் வர வேண்டாம் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நாங்களே தகுதியான படங்களை தேர்வு செய்து செல்போனில் அனுப்புவோம், அதில் ஏதாவது மாற்றம் தேவைபட்டால் மட்டும் நேரில் வந்து பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே போல் ஒரே பாடப்பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்யும்போது அந்தப் பாடப்பிரிவில் கூடுதல் இடங்களை ஒதுக்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.