திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மிக கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் பிற நீர் நிலைகளின் அருகில் வசித்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, வெள்ள நீர் வடிந்து மெல்ல மெல்ல திருநெல்வேலி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி, தொல்.திருமாவளவன் எம்பி, துரை வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக திருநெல்வேலிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.30) நடைபெறுகிறது.
தனது 68வது திரைப்பட பணிகளுக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று முந்தினம் கேப்டன் விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு அவரது உடலுக்கு அன்றைய தினமே சென்னையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தித் திரும்பினர்.