தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே பேனரில் தல தளபதி.! ஷாக் கொடுத்த அஜித் ரசிகர்கள்.! - விஜய்

திருநெல்வேலியில் அஜித் ரசிகள் வைத்த பேனர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஒரே பேனரில் தல தளபதி
ஒரே பேனரில் தல தளபதி

By

Published : Dec 30, 2022, 12:40 PM IST

திருநெல்வேலி:தமிழ் திரை உலகில் சிவாஜி - எம்ஜிஆர், ரஜினிகாந்த் - கமல் ஹாசன் வரிசையில் விஜய் - அஜித் உள்ளனர். நடிகர்கள் நட்பாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இருவரையும் எதிரிகளைப் போன்று சித்தரித்து படம் வெளியீட்டின் போது கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.

சமீப காலமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் எதிரும் புதிருமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக படம் ரிலீஸ் ஆகும் போது கொண்டாட்டங்களில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி எல்லாம் நடைபெற்ற சம்பவமும் உண்டு. இந்த நிலையில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு ஒரே நாளில்திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை திரையரங்கு ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இணைத்து ரசிகர்கள் வைத்துள்ள பேனர் வெகுவாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த பேனரில் விஜய் அஜித் உருவ படங்களை அருகருகே இடம் பெற செய்து இருவரின் கழுத்திலும் ரோஜா பூ மாலை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.

பேனரின் மேல்புறம் தல ரசிகர்கள் சார்பாக துணிவு மற்றும் வாரிசு மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளனர். அஜித் படத்தை சுற்றி நெல்லை மாவட்ட தலைமை தல அஜித் குமார் நற்பணி இயக்கம் என்றும் விஜய் புகைப்படத்தின் கீழே உன்னால் முடியும் என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி பேனரை அகற்ற திரையரங்க உரிமையாளர் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Exclusive: “தட்டி கொடுப்பார்கள் என்று நினைத்தேன், தள்ளிவிட்டார்கள்” - பிரபு சாலமன்

ABOUT THE AUTHOR

...view details