தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்; ஆட்சியர் எச்சரிக்கை

திருநெல்வேலி: தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்;  ஆட்சியர் எச்சரிக்கை
தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்; ஆட்சியர் எச்சரிக்கை

By

Published : Mar 5, 2021, 11:37 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்; ஆட்சியர் எச்சரிக்கை

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கமளித்த ஆட்சியர் விஷ்ணு, “திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாய கூடங்களை அரசியல் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன் விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும்” என்றார்.

இதையும் படிங்க :ராணுவ சேவை நாட்டிற்குத் தேவை: பாதுகாப்புப் படைக்கு கிராமம் தரும் சேவை!

ABOUT THE AUTHOR

...view details