தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் 4 சவரன் நகைக்காகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே தூத்துக்குடி மாவட்டம் பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) இசக்கி முத்துவை காவல் துறையினர் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவரை காவல் துறையினர் கைது செய்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து தனக்கு முதுகு வலி ஏற்பட்டதாக முருகன் கூறவே, பாளையங்கோட்டை சிறை காவலர் கண்காணிப்பில் நெல்லை அரசு உயர்தர மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.