நெல்லைதச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இன்று நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ’ட்விட்டரில் அண்ணாமலை பிரதமர் மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் from a pariah (பறையா) to viswa guru என்று குறிப்பிட்டுள்ளார்.
pariah (பறையா) என்றால் உலக அளவில் ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் எனப் பல பொருள் தரும்படி சொல்லப்படுகிறது. எனவே அண்ணாமலை இது போன்று குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டதற்கு, அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சென்னை அடுத்த ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்ககோரி கொரட்டூரைச்சேர்ந்த அரிவேந்தன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..