திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர், சாலை வசதி, பிற சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க 1800 425 4656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் திருநெல்வேலி மாநகராட்சி இலவச தொலைபேசி சேவை குறித்தும், அதன் பராமரிப்புச் செலவு குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
பொதுத் தகவல் அலுவலர் அளித்த பதில்
அதன்படி மாநகராட்சிப் பொதுத் தகவல் அலுவலர் அருணாச்சலம் தற்போது அளித்த பதிலில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 2010 முதல் 2016 வரை இந்தக் கட்டணமில்லா சேவை குறித்த பதிவேடு பராமரிக்கப்படவில்லை என்றும், 2016 ஜூன் முதல் 2020 ஆகஸ்ட் வரை மொத்தம் 30 லட்சத்து 36 ஆயிரத்து 695 ரூபாய் பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டுமுதல் 2016 மே வரை திருநெல்வேலியைச் சேர்ந்த பிட்ஸ் என்ற கணினி நிறுவனம் இந்தக் கட்டணமில்லா சேவையைப் பராமரித்துவந்ததாகவும், 2016 ஜூன் முதல் தற்போதுவரை நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் இந்தச் சேவையைப் பராமரித்துவருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவு
ஆண்டுகள் வாரியாக...
- 2016- 2017ஆம் ஆண்டில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ரூபாய்,
- 2017 - 2018ஆம் ஆண்டில் ஆறு லட்சத்து 80 ஆயிரத்து 940 ரூபாய்,
- 2018 -19ஆம் ஆண்டில் ஏழு லட்சத்து 53 ஆயிரத்து 489 ரூபாய்,
- 2019-2020ஆம் ஆண்டில் ஏழு லட்சத்து 71 ஆயிரத்து 12 ரூபாய்,
- 2020- 21 ஆகஸ்ட் வரை மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 255 ரூபாய்