தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2019, 9:47 PM IST

ETV Bharat / state

நாங்குநேரி தொகுதியின் தற்போதைய நிலை என்ன?- ஓர் அலசல்!

நெல்லை மாவட்டத்தில் பின்தங்கிய தொகுதி என்றால் நாங்குநேரியைக் கூறலாம். ஒரு வட்டத்தின் தலைநகரமாக நாங்குநேரி இருந்தாலும், அதன் நிலை மிகவும் வேதனை அளிக்கும் விதமாகவே உள்ளது.

nanguneri

வரும் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதியை தங்கள் கூடாராமாக மாற்றியுள்ளனர். தெருவிற்கு தெரு ஒரு அமைச்சர், தினந்தினம் ஒரு அரசியல் பிரமுகர்கள் என மக்கள் முன் தங்கள் சிறப்புகளையும், தங்கள் ஆளுமை திறனையும் எடுத்துரைத்து வருகின்றனர். உண்மையில் நாங்குநேரியின் சிறப்புகள் என்ன? அதன் குறைகள் என்ன? என்பதைக் கூறுகிறது இச்செய்தி தொகுப்பு.

நாங்குநேரி தொகுதி ஒரு பார்வை

நெல்லை மாவட்டத்தின் பரந்து விரிந்த தொகுதி நாங்குநேரி. நெல்லை மாநகர் பகுதியில் உள்ள கேடிசி நகரில் இருந்து நாங்குநேரி, ஏர்வாடி, களக்காடு வரை உள்ளடக்கியது இத்தொகுதி. மொத்தம் 2,56,414 வாக்காளர்களைக் கொண்ட நாங்குநேரி 70 சதவிகிதம் விவசாயத்தை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாங்குநேரியில் தாமிரபரணி, சிற்றாறு, பச்சையாறு, நம்பியாறு என பல ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் பாளையங்கோட்டை ஊராட்சிக்கு அருகில் வருகிற தாமிரபரணி ஆறு மட்டுமே மக்களின் விவசாயத்திற்குப் பெரிதாக பயன்படுகின்றது. முழுவதுமாக குளத்து பாசனத்தையே நம்பி இந்த தொகுதியின் விவசாயம் நடைபெற்று வருகிறது. நாங்குநேரியில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பெரும்பாலும் இவைகள் வறண்டு பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளிக்கின்றது.

நாங்குநேரி தொகுதி

விவசாயத்தைத் தவிர்த்து, வாழ்வு ஆதாரத்திற்கு இந்த தொகுதி மக்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் போதிய கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்களோ நாங்குநேரியில் இல்லை. இங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு அதிக அளவு திருநெல்வேலி மாநகர் அல்லது கன்னியாகுமரிக்குச் செல்லும் நிலை உள்ளது. படித்த மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலையில் உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது, " கடந்த திமுக ஆட்சியின் போது நாங்குநேரி தொகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் பூங்கா மற்றும் தொழிற்சாலைகள் அமைவதற்கான பல திட்டங்கள் போடப்பட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படுகின்ற சாதிய கலவரங்களைக் குறைக்கும் நோக்கில் இது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை இத்திட்டங்கள் திட்டங்களாகவே இருக்கின்றது. உலக நாடுகளிடம் இருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிற்சாலைகளை வரவழைக்க விரும்பும் ஆளும் கட்சியினர்களுக்கு, நாங்குநேரி ஏன் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி

நெல்லை மாவட்டத்தில் பின்தங்கிய தொகுதி என்றால் நாங்குநேரியைக் கூறலாம். ஒரு வட்டத்தின் தலைநகரமாக நாங்குநேரி இருந்தாலும், அதன் நிலை மிகவும் வேதனை அளிக்கும் விதமாகவே உள்ளது.

தொழிற்சாலைகள் மட்டுமின்றி வெள்ளக்கால்வாய் போன்று பல திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்ததோடு நிற்கின்றது. விவசாயிகளுக்கான காப்பீடுத் திட்டங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான கடன்கள் உள்ளிட்டவைகள் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது. மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டம் கூட சரியாக செயல்படுத்துவதும் இல்லை. அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் மக்களுக்கு சென்றடையவில்லை. புதிய குடும்ப அட்டை வாங்குவதும், புதிய பெயர்களைச் சேர்ப்பதும் கூட மிக கடினமான வேலை. இதுவே எங்கள் கிராமத்தின் நிலை" என்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினை முதல்வராக்க நடக்கும் இடைத்தேர்தல் - திருநாவுக்கரசர்

ABOUT THE AUTHOR

...view details