திருநெல்வேலி மாவட்டம், பாளையஙகோட்டை - தூத்துக்குடி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இன்று (மே. 6) காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பாளையஙகோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை! - இளைஞர் கொலை
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A Youth Murdered In thirunelveli
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாராணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் எம்.கே.பி. நகரைச் சேர்ந்த மகாராஜன் என்பதும், இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய தந்தை சிறையில் அடைப்பு