தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு - நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் தொல்லை

நெல்லையில்,அதிமுக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:பாதிக்கப்பட்ட பெண் புகார்
நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:பாதிக்கப்பட்ட பெண் புகார்

By

Published : Feb 18, 2022, 12:27 PM IST

நெல்லை:மகராஜநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (எ) ஆனந்தவள்ளி என்ற பெண் நெல்லையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஜெனி என்பவர் மீது மாநகரக் காவல் ஆணையர் துரைக்குமாரிடம் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுக பிரமுகர் பாலியல் சீண்டல்

இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனது கணவர் என்னை விட்டு பிரிந்த நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அற்புதம் பெண்கள் அழகு நிலையம் மற்றும் அழகு பயிற்சி மையம் நடத்தி வந்தேன்.எனது கடை அருகில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் ஜெனி என்பவர் கடந்த 2015ம் ஆண்டு திருமண தகவல் நிலையம் நடத்தி வந்தார்,பக்கத்து கடைக்காரர் என்ற முறையில் அவர் என்னிடம் பழகினார்.

அப்போது அதிமுக ஆட்சி என்பதால் தனக்கு அதிக அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் ஏதாவது பிரச்சினை என்றால் உதவி கேட்கும்படியும் கூறினார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது,பின்பு அடிக்கடி எனது கடைக்கு வந்து என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.அவரது பேச்சில் மயங்கி அவர் விரித்த வலையில் சிக்கிக் கொண்டேன்.

அவர் பெண்களை வசியம் செய்வதில் வல்லவர்.இந்நிலையில் எனது கடை பராமரிப்புக்காக ஜெனியிடம் 50 ஆயிரம் கடன் வாங்கினேன்.இதற்கிடையில் எனது அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் பிற பெண்கள் மீதும் மோகம் கொண்டு அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை அணுகினார்.

நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:பாதிக்கப்பட்ட பெண் புகார்

மிரட்டல்

அவரது விருப்பத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் எனது கடையை அவரிடம் ஒப்படைக்கும்படி மிரட்டினார். ஏற்கனவே மகரப் அலி மற்றும் தங்கராஜ் ஆகியோரிடம் நான் வாங்கிய கடன் பற்றி தெரிந்து கொண்டு அவர்களையும் எனக்கு எதிராக செயல்பட வைத்தார்.அழகு நிலையத்தை தன்னிடம் கொடுத்து விடும்படியும் அதில் வேலை பார்க்கும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து அதிக லாபம் அடையப்போவதாகவும் தெரிவித்தார்.

அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் ஜெனி,மகரப் அலி மற்றும் தங்கராஜ் ஆகியோர் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.மேலும், 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எனது கடை பொருள்களை ஜெனி அபகரித்துக் கொண்டார்.இதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலியல் புகார்

எனவே ஜெனி,மகரப் அலி மற்றும் தங்கராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் ஆனந்தவள்ளி தெரிவித்துள்ளார்

ஆனந்தவள்ளி தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அதிமுக வழக்கறிஞர் ஜெனி தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியின் 6வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதையும் படிங்க:'ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது, கொடநாட்டில் நடந்த சம்பவம்' - ஸ்டாலின்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details