வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை நீடித்துவருகிறது. குறிப்பாக சென்னை நகர்ப் பகுதியில் தொடர் மழையால் சாலைகள், குடியிருப்புப் பகுதியில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
இதனிடையே நிவர் புயல் பாதிப்பில்லாத மாவட்டங்களிலிருந்து களப்பணியாளர்கள், நிவாரண பொருள்களை அனுப்பிவைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்திலிருந்து மாநகராட்சி சார்பில் 10 அலுவலர்கள் தலைமையில் 100 பணியாளர்கள் கொண்ட குழுவினர் இன்று (நவ. 25) நிவர் புயல் மீட்புப் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.