நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த வடகரையை சேர்ந்த முருகன், பேச்சியம்மாள் தம்பதி. முருகன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இவர்களது மகளான ராமலெட்சுமிக்கும், செய்துங்கநல்லூரைச் சோ்ந்த மாரியப்பனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. மாரியப்பன் டாஸ்மாக் மதுபான கடையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனிடம் கோபித்து கொண்டு ராமலெட்சுமி இரண்டு வாரங்களாக வடகரையில் உள்ள தனது தாய் வீட்டில் வந்து தங்கியுள்ளார். மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் பேச்சியம்மாள் பக்கத்திற்கு கிராமத்திற்கு சென்றுவிட, ராமலெட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். மறுநாள் மதியம் பேச்சியம்மாள் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் ராமலெட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைத்தார்.
பின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தேக மரணம் என முதலில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராமலெட்சுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு, அவரது அண்ணன் நயினாரை பிடித்து விசாரணை நடத்தினர்.