தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

திருநெல்வேலி: 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை
Sexual harassment

By

Published : Oct 23, 2020, 12:02 AM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேவுள்ள மருதமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன்பெருமாள் (34). இவர் அப்பகுதியைச் சேர்ந்த16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த சிறுமி, சிவபெருமாளிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று சிறுமிக்கு சிவன்பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சிவன்பெருமாளை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி இந்திராணி நேற்று (அக்.22) தீர்ப்பளித்தார்.

அதில் குற்றவாளி சிவன்பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராதம் விதிக்கப்பட்ட தொகையை சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details