திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவர் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்தை தழுவி தனது பெயரையும் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவி அய்யம்மாள் (45). திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.நேற்று(04.05.2023) காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அவரை கணவர் பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்ற போது, மருத்துவமனை அருகே உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வைத்து கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவன் - மனைவி சண்டையை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்துள்ளனர். வாய் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் அய்யம்மாளை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தான் வைத்திருந்த மண்ணெணெய்(Kerosene) கேன் கொண்டு அய்யம்மாள் தலையில் ஓங்கி அடித்ததோடு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கள்ள காதலியை எரித்துக்கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!