திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் பாளையங்கோட்டை - திருவனந்தபுரம் சாலையில் புதியதாக ரெஸ்ட்ரோ கபே என்ற உணவகத்தை நேற்று(டிசம்பர் 18) திறந்துள்ளார். கடை திறப்பு விழா சலுகையாக சீரக சம்பா சிக்கன் பிரியாணி 49 ரூபாய்க்கும் சிக்கன் ஷவர்மா 11 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரூ.49க்கு சீரக சம்பா சிக்கன் பிரியாணி.. நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்! - பாளையங்கோட்டை
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம் ஒன்றில் வெறும் 49 ரூபாய்க்கு சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

Etv Bharat
சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு தொடர்பான போஸ்டர் வைரலான நிலையில் சிக்கன் பிரியாணியை ருசிக்க காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடை ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவு