நெல்லையில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதை பிரிப்பதற்கான பூர்வாகங்க பணிகள் தொடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர் அருண்சுந்தர் தயாளன் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தென்காசி தனிமாவட்டம்: தனி அலுவலர் நியமனம்
நெல்லை: தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கான தனி அலுவலர் அருண் சுந்தர்தயாளன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது, மாவட்டம் பிரிப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 9ஆம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளன. 10ஆம் தேதி தென்காசி மக்களிடம் கருத்து கேட்கப்படும், இந்த கருத்து கேட்கும் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்துகொள்வார் என தெரிவித்தார்.
மேலும், கூறுகையில், தனி மாவட்டம் பிரிப்பதற்கு 200 வருவாய் கிராமங்கள், இரண்டு கோட்டங்கள் இருக்கவேண்டும். பத்தரை லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும், இதுகுறித்து அரசுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அறிக்கை அளிக்கப்படும். கருத்துக் கேட்பு கூட்டம் சுமுகமாக நிறைவடையும் பட்சத்தில் மாவட்டம் பிரிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.