தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரத்தில் மகளை கொன்ற தாய் - நெல்லை பகீர் சம்பவம்! - கழுத்தை நெறித்து கொலை

திருநெல்வேலி காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரத்தால் மகளை கொலை செய்த தாயும் தற்கொலைக்கு முயற்சி
காதல் விவகாரத்தால் மகளை கொலை செய்த தாயும் தற்கொலைக்கு முயற்சி

By

Published : Nov 23, 2022, 4:16 PM IST

Updated : Nov 23, 2022, 5:02 PM IST

திருநெல்வேலி அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி. இந்த தம்பதிக்கு அருணா(19) என்ற மகள் இருந்தார். இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார்.

சமீபத்தில் அருணா விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா அங்கு மயங்கி கிடந்துள்ளார்.மேலும், அவரது தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே கிடந்துள்ளார்.

உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அதில், அருணா கல்லூரியில் படித்தபோது இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாகவும், அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுக கனி தனது மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பழனியில் கேரள தம்பதி தற்கொலை!

Last Updated : Nov 23, 2022, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details