திருநெல்வேலி அடுத்த மூலக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (அக்.08) திடீரென காட்டுத்தீ பரவியது. காற்று வீசியதால் காய்ந்து கிடந்த சறுகுகளில் தீப்பற்றி மளமளவென பரவியது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து நாங்குநேரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மூலக்கரைப்பட்டி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.