தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக பதவியேற்றார் 90 வயது மூதாட்டி - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டின் மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக நெல்லையைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பதவியேற்றார்.

பதவியேற்றார் 90 வயது மூதாட்டி
பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

By

Published : Oct 20, 2021, 4:15 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர் இன்று (அக்.20) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக நெல்லையைச் சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள் (90) பதவி ஏற்றார்.

சக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

அதாவது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியிட்ட மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

மொத்தம் 2,060 வாக்குகள் பதிவான நிலையில் 1,568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக செல்வராணி 440 வாக்குகளும் உமா 72 வாக்குகளும் பெற்றனர்.

எப்போதுமே நல்லது செய்கிறோம்

இதுகுறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், "வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம்.

அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எனக்கு 90 வயதாகிறது. ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

நான் தற்போது முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளேன். ஊர் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்" என்றார்.

மக்களுக்கு சேவை

சிவந்திபட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் லிங்கம்மாள் கூறுகையில், "பெருமாத்தாள் பாட்டி, எங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவார். அவருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று, மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுப்போம்" என்றார்.

பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

நல்லது செய்வார்

சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில், "சிவந்திப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாளை தேர்வு செய்துள்ளோம்.

அவர்கள் குடும்பத்தில் இவர் 7ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். 90 வயதிலும் இளமையாக சுறுசுறுப்பாக வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டார். அதே இளமையோடு ஊர் மக்களுக்கு நல்லது செய்வார்" என்றார்.

இதையும் படிங்க:அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details