தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை உள்ளிட்ட தேர்தல் விதிமுறை பணிகள் நடந்து வருகிறது.
நெல்லையில் இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் குவிப்பு! - arrived
நெல்லை: நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் திருநெல்வேலிக்கு இன்று வந்தனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 83 பேர் கொண்ட இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், தேர்தல் பணிக்காக இன்று திருநெல்வேலி வந்துள்ளனர். இவர்களை மாநகர காவல் ஆணையர்பாஸ்கரனைசந்தித்து இன்று முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகளைத் தொடங்கினர்.
இவர்கள் வாகன சோதனை, ரோந்துப்பணி, பதற்றமான வாக்குச்சாவடி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை கவனிக்க உள்ளனர்.மேலும், மூன்று கம்பெனி படையினர் திருநெல்வேலி மாநகர் பகுதியில் பணியாற்ற விரைவில் வர உள்ளனர்.