தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காருக்குள் 7 வயது சிறுமி மர்ம மரணம் - போலீஸ் விசாரணை! - காருக்குள் மூச்சுத்திணறி சிறுமி பலி

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே 7 வயது சிறுமி காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிறுமி காருக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

child
நெல்லை

By

Published : Apr 27, 2023, 9:42 PM IST

நெல்லை: நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளாக்கால் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கனகா (29). குடும்பத் தகராறு காரணமாக கனகா தனது கணவரைப் பிரிந்து, மகள் சரண்யா(7)-வுடன் வசித்து வந்தார். கனகா அப்பகுதியிலுள்ள தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சிறுமி சரண்யா அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமி சரண்யா இன்று(ஏப்.27) அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரது காரின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமியைக் காணவில்லை. வேலைக்குச் சென்று வீடு திரும்பிய கனகா, சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

நீண்டநேரமாக தேடிய நிலையில், சிறுமி சரண்யா காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டுபிடித்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த பாப்பாக்குடி போலீசார் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி காருக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details