தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களுக்கு 50,000 முகக் கவசங்களை வழங்கிய வைகோ மகன்! - corona help to police

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு 50,000 முகக்கவசங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கினார்.

காவலர்களுக்கு 50,000 முகக் கவசங்களை வழங்கிய வைகோ மகன்
காவலர்களுக்கு 50,000 முகக் கவசங்களை வழங்கிய வைகோ மகன்

By

Published : Jun 5, 2021, 9:33 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு உதவி செய்யும் வகையில் 50,000 இலவச முகக் கவசங்களை துரை வைகோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனை நேரில் சந்தித்து இன்று வழங்கினார்.

ஏற்கனவே விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினி, நிவாரணப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

அதேபோல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆயிரம் பேருக்கு நிவாரண பொருள்களை துரை வைகோ வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "குடும்பத்தை மறந்து களத்தில் பணியாற்றும் காவலர்களை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்"என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் இந்த உதவியைச் செய்துள்ளார். இந்த நிகழ்வின் போது சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக்குமார், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details