திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் தனிமையில் வசித்துவந்த சண்முகவேல், செந்தாமரை தம்பதயின் வீட்டில் கடந்த 12ஆம் தேதி இரவு கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களை இருவரும் சேர்ந்து அடித்து விரட்டினர். இருந்தும் செந்தாமரை கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
நெல்லை தம்பதியிடம் கொள்ளை: 5 தனிப்படை அமைத்து விசாரணை! - police investigation
திருநெல்வேலி: தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியிடம் ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட முயன்ற முகமூடி கொள்ளையளர்களை, ஐந்து தனிப்படை அமைத்து தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அவர்கள் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் வெளியாகி ஒரே நாளில் உலகம் முழுவதும் நெல்லை தம்பதியினர் புகழ்பெற்றனர். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கைகளால் அவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களிடம் கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தடயங்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.