திருநெல்வேலி: இடிந்தகரைப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரத்தில் இடிந்தகரைப் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள், அப்பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிப்பதற்காக விரித்த வலைகளை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அறுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 39 பேர் நேற்று (மார்ச். 14) இரவு அதே பகுதியில் 7 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி மீனவர்கள் 39 பேர் சிறைபிடிப்பு அவர்களை இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (மார்ச். 15) அதிகாலை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடங்குளம் கடலோர காவல் படையினர், கூடங்குளம் காவல் துறையினர், ராதாபுரம் மீன்வளத் துறையினர் ஆகியோர் இடிந்தகரை பகுதிக்கு வந்து, சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதற்கு அவர்கள் உரிய இழப்பீடு தரும் வரை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இதையும் படிங்க:'புத்தகப் பூங்கா அமைக்கப்படும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்