திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியாவின் மகள் பிரிஷா (14). இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
இளம் வயதில் அதிக உலக சாதனை :இவர் இதுவரை200க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு தன்னுடைய அசாத்திய திறமையால் பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு யு.எஸ்.ஏ குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. மேலும், இளம் வயதிலேயே மூன்று முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’இளம் வயது யோகா ஆசிரியர்; என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.
100 வது உலக சாதனை:இதுவரை70 உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா. தனது 100 வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இன்று தனது கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது நூறாவது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த நிகழ்வில் நோபல் வேல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருள்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக்க வேகமாக செய்வது, மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல்,