திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக பாளையங்கோட்டை காவல் துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்த சென்ற காவல் துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பணம், லாரி, பைக் பந்தயத்தில் அரங்கேறிய நெல்லை சூதாட்டம்... 29 பேர் அதிரடி கைது! - Tirunelveli high tech gambling
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
![பணம், லாரி, பைக் பந்தயத்தில் அரங்கேறிய நெல்லை சூதாட்டம்... 29 பேர் அதிரடி கைது! கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:18:22:1596959302-tn-tvl-01-nellai-accusedarrest-rummygame-play-scrpt-7205101-09082020131506-0908f-1596959106-536.jpg)
கைது
அவர்கள் இருசக்கர வாகனங்கள், மணல் லாரி, கார் மற்றும் பல பொருட்களை பந்தயமாக வைத்து விளையாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.4.5 லட்சம் பணம், 22 இரு சக்கர வாகனங்கள், 2 மணல் லாரிகள், ஒரு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில், 29 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.