திருநெல்வேலி : நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருடப்பட்ட வழக்கில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானப்புரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரி (47). சம்பவத்தன்று சண்முகசுந்தரி வெளியூர் சென்றதால் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர் இன்று (ஜன.28) வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளைப் போனது தெரியவந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரி, நடந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : பொள்ளாச்சி தங்கக் கட்டி மோசடி; 3 பேர் கைது