நெல்லை மாவட்டத்தில், அரசு உத்தரவை மீறி தொடர்ந்து சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், அக்குழுவினர் கடந்த 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 129 பேரை தனிக் குழு காவலர்கள் கைது செய்தனர்.