தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் மாஸ்க் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை!

திருநெல்வேலி : மாஸ்க் அணியாமல் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா
ரோனா

By

Published : Aug 12, 2020, 5:56 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாத நபர்களிடம் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், நடராஜன் மற்றும் மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருச்செந்தூர் செல்லும் சாலையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாஸ்க் அணியாத சாலையோர வியாபாரிகளுக்கு அலுவலர்கள் தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மாஸ்க் அணியாமல் வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details