நெல்லை மாவட்டத்தில் கடந்த 92-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போது தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஏராளமான மலைப்பாம்புகள் ஆற்றின் வழியாக நகர்ப் பகுதியில் உள்ள வயல்வெளிகள், புதர் பகுதிகளில் தஞ்சமடைந்தன. அன்றைய தினத்திலிருந்து ஆற்றுப் பகுதி, ஆற்றங்கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் இதுவரை ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை அமைந்துள்ளது. இந்த பகுதியில் மீன் கழிவுகளை தின்பதற்காக வந்த மலைப்பாம்பு ஒன்று அதன் அருகில் உள்ள முட்புதரில் தங்கி, ஒரு பெரிய குழி அமைத்து அதில் 30 முட்டைகளைவிட்டு அதன்மீது சுருண்டு அடைகாத்த நிலையிலிருந்து வந்துள்ளது.