தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வைகை நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(24). இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமலைத்தேரி பகுதியில் செல்லக்கூடிய மூலவைகை ஆற்றில் இன்று குளிப்பதற்காக சென்ற விஜயகுமாருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.