கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி வெள்ளத்தூவல் உள்ள வீடு ஒன்றில் கட்டுமான பணிகள் நடந்துவந்தது. இதில், 5 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் முதுவான்குடியைச் சேர்ந்த பவுலஸ் (52) என்பவர் உயிரிழந்தார்.
இடுக்கியில் மண்சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு - இடுக்கியில் மண்சரிவு
இடுக்கியின் அடிமாலி வெள்ளத்தூவலில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மண் சரிவு
இதற்கு முன்னதாக அவரை 20 நிமிடம் போராடி மண்ணிலிருந்து வெளியில் எடுத்தனர். கேரளா மாநிலம் இடுக்கியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுவருகிறது. நேற்று (ஜூலை 4) கேரள மாநிலம், இடுக்கியின் எலப்பாறையில் மண்சரிவு ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இடுக்கி மாவட்டத்தில் மண்சரிவு - பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!