மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் பல அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: தேனியில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்! - theni youth congress protest
தேனி: ஆட்சியர் அலுவலகம் முன்பாக வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி மண்வெட்டியுடன், அரைநிர்வாணமாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
port
அதன் ஒரு பகுதியாக, இன்று தேனி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மண்வெட்டியுடன் அரை நிர்வாணமாக நின்றபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.