தேனி: பெரியகுளம் அருகே வசித்து வரும் 32 வயதான நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இவர் அவரது உறவினரின் வீட்டில் 9ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது - பெரியகுளம்
தேனி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இளைஞர் கைது
அதனடிப்படையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அவர், நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணும் படையப்பாவும்.. ஆடிப்போன காஞ்சிபுரம் போலீசார் - நடந்தது என்ன?