இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் புதுலயத்தைச் சேர்ந்தவர் யாகூப். இவரது வங்கி கணக்கில் பெற்றோர் புதிய வீடு கட்டுவதற்கு சுமார் 6 லட்சம் ரூபாயை போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் சுமார் ஓன்றரை லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இவரின் பக்கத்து வீட்டில் 3 பவுன் தங்க நகை திருடு போனது. இதனை விசாரிக்க வந்த போது மேலும் அங்கிருந்த 5 வீடுகளில் தங்க நகை திருடு போனது போலீசாருக்கு தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் யாகூப் கைது செய்யப்பட்டார்.