தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் குழி தோண்டி பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

தேனி: சிங்கராஜபுரம் அருகே வீட்டில் குழி தோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

8 கிலோ கஞ்சா பறிமுதல்
8 கிலோ கஞ்சா பறிமுதல்

By

Published : Feb 13, 2021, 3:29 PM IST

தேனியில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா கடத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த தனிப்படைக்கு வெற்றி எனும் மோப்பநாய் உதவியாக இருந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட வருசநாடு பகுதிகளில் மோப்ப நாய் வெற்றி உதவியுடன், தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் பகுதியில் உள்ள வேலு என்பவரது வீட்டை சந்தேகத்துடன் மோப்ப நாய் வெற்றி அடையாளப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், ஆழமாக தோண்டப்பட்ட குழியில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டது.

பின்னர் கஞ்சா பதுக்கலில் தொடர்புடைய சிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் காம்ளி (25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர்களையும் பிடிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details