தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள தலையாறு அருவி என்றழைக்கப்படும், எலிவால் நீர்வீழ்ச்சி தான் இதன் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.
தமிழ்நாட்டின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இதன் அழகை கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தேனி மாவட்ட எல்லையான டம்டம் பாறை பகுதியிலிருந்து ரசித்தவாறு செல்வதுண்டு. ஆனால் அருவி அமைந்திருக்கும் இடம் ஆபத்து நிறைந்த அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், சிறுத்தை, காட்டெருமை பேன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தலினாலும் வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.