தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழி என கேலி செய்த வாலிபருக்கு கத்திக்குத்து! - FATHER & SON ARREST

தேனி: கோழி திருடியதை கூறி கேலி செய்த நபரை கத்தியால் குத்திய தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோழி என கேலி செய்த வாலிபருக்கு கத்திக்குத்து

By

Published : May 15, 2019, 10:06 AM IST

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டியை சேர்ந்தவர் பரமன்(49). இவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியை ஏப்ரல் 11ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன், ராமு ஆகிய இருவர் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து, இரு தரப்பை சேர்ந்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து பரமனின் மகன் பிரபாகரன்(26) கோழி திருடியதை நினைவுபடுத்தி ராஜபாண்டியனை நக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் மற்றும் அவரது தந்தை முருகன் ஆகிய இருவரும் பிரபாகரனுடன் டீக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தந்தை, மகன் இருவரும் பிரபாகரனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்துவிட்டார். இதனையடுத்து, இறந்தவரின் தந்தை பரமன் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details