தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது! - பாலியல் தொல்லை

தேனி: அல்லிநகரம் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 21 வயது இளைஞரை காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

By

Published : Dec 25, 2020, 10:37 PM IST

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அஜித் (21), பெற்றோருக்கு சொந்தமான மாடுகளை கவனித்து வருகிறார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி கடந்த 2 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இதனைத் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர், அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கரோனாவால் பாலியல் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்!

ABOUT THE AUTHOR

...view details