தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள விளையாட்டுக் கழகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
போட்டியில் ’ஏ’ மற்றும் ’பி’ என்று இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ’ஏ’ பிரிவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவிகளும், ’பி’ பிரிவில் அனைத்து மகளிரும் கலந்துகொண்டனர். தென்கரை நூலகத்தில் இருந்து சோத்துப்பறை சாலையில் உள்ள குழாய் தொட்டி வரை சென்று மீண்டும் அங்கிருந்து திரும்பி நியூ கிரவுண்ட் வரை 6 கி.மீ. தூரம் வரை சைக்கிள் போட்டி நடைபெற்றது.