தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் பிரியங்கா(30). இவருக்கும் சென்னை வடபழனியைச் சோந்த பல்லவராஜன் என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு தர்ஷிகா என்ற 14 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து போடியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு விவாகரத்து கொடுத்து விடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பல்லவராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் இருவரையும் சேர்ந்து வாழவைக்கும் முயற்சியில், தேனி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மணமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று, தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.