கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசி வருகிறது. வினாடிக்கு 12 மீட்டர் என்ற அளவில் காற்றின் வேகம் உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் மின்சார உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில், ஒரு காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக 25 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் வீசும் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் அந்த பகுதிகளில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.