தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன்’ - ராமதாஸ் - ராமதாஸ் பேச்சு

தேனி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பெரியகுளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார்.

பெரியகுளம் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

By

Published : Mar 30, 2019, 11:53 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் சௌராஸ்டிரா சத்திரம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் லோகிராஜன், மயில்வேல் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய அவர்,

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெறுவது உறுதி. துணை முதலமைச்சரின் செல்லப்பிள்ளைக்கு வாக்கு சேகரிக்க இங்கு வந்துள்ளேன். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படும் ஈ.வி.கே.சம்பத்தின் மகன் இளங்கோவன்தான் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே. சம்பத், திமுகவை விட்டு சென்றதற்கு காரணம் கலைஞர்தான். காங்கிரஸ் மற்றும் திமுக தமிழகத்துக்கு துரோகம் இழைத்திருக்கிறது.இந்த தேர்தலில் இளங்கோவன் டெபாசிட் கூட வாங்க மாட்டார். அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார்தான் வெற்றி பெறுவார்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெறும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 120 தொகுதிகளைதான் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தேவைகளை ஆளுங்கட்சிதான் பூர்த்தி செய்யும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எதிர் கட்சிகளால் ஏதும் செய்ய இயலாது.

முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் உங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி அதனை நிறைவேற்ற நான் அவர்களிடம் வலியுறுத்துவேன். எனவே, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details