கேரளா மாநிலம் பழைய மூணாறு பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை திடீரென கொம்பன் எனப்படும் காட்டு யானை வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்தது. யானை வருவதை கண்ட மக்கள் வீட்டுக்குள் பூட்டிக் கொண்டனர். மேலும் பலர் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் யானையை தூரத்தில் இருந்து பார்த்தவர்களை யானை விரட்ட தொடங்கியது. இதனால் இந்த பகுதி மக்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வருகிறது.