தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தும் காட்டு யானை - யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை

தேனி: மூணாறில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Wild elephant padayappa damaging residential areas in Munnar
Wild elephant padayappa damaging residential areas in Munnar

By

Published : Aug 26, 2020, 6:56 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைக்கூட்டம் விளைநிலங்கள், தோட்டப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகின்றது.

படையப்பா எனும் காட்டு யானை சுற்றுலாத் தலமான மூணாறில் அடிக்கடி பல சேதங்களை விளைவித்துவருகிறது.

இந்நிலையில் மூணாறு காலணி பகுதியில் நேற்றிரவு ஒய்யாரமாக வீதியுலா வந்த காட்டு யானை படையப்பா, சாலையோரம் இருந்த காய்கறி மற்றும் பழக்கடைகளை சேதப்படுத்தியது.

கப்பை, வாழை, உள்ளிட்டவைகளை உட்கொண்டதோடு மட்டுமல்லாமல், கடையை சேதப்படுத்தியால் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே பொதுமக்கள், விவசாயிகள், மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மூணாறு பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details